சென்னை, செப்.26- சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், பருவமழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. எனவே, சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மண்டலம் வாரியாக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, திருவொற்றியூர் (மண்டலம்) – தமிழ்நாடு […]