செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் தற்காலிக ஒத்திவைப்பு

புதுடெல்லி, மே 4– ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் 14வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9–ந் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் நடத்தப்பட்டு வருகின்றன. மே 30–ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது 29 போட்டிகள் முடிந்து நேற்று 30 போட்டியாக கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி நடக்க இருந்தது. […]

செய்திகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு தனி விமானம் இயக்க கிறிஸ் லின் வேண்டுகோள்

மும்பை, ஏப்.27 ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக கிறிஸ் லின், ‘நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர்களைத் தனி விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன்.  எங்களை விட மிக […]

செய்திகள்

ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்

சென்னை, ஏப். 26– நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் அஸ்வின் கலந்து கொண்டார். இந்த நிலையில், இந்த போட்டிக்கு பிறகு டெல்லி அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டுவீட்டர் பக்கத்தில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் […]

செய்திகள்

குணமாகாத முழங்கால் காயம்: ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்

சென்னை, ஏப். 23– ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் அணிக்காக விளையாடும் சேலத்தை சேர்ந்த ‘யாக்கர்’ நடராஜன் முழங்கால் காயம் குணமாகாத நிலையில், தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு ஐபிஎஎல் சீசனில், ஐதராபாத் அணிக்காக, நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக விளையாடவில்லை. அவர் விரைவில் மீண்டு வந்து விளையாடுவார் என வார்னர், விவிஎஸ் லஷ்மன் நம்பிக்கையுடன் தெரிவித்தனர். நடராஜன் விலகல் ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]