ஐதராபாத், டிச.26- புஷ்பா-2’ படத்தின் சிறப்பு காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு படக்குழு ரூ.2 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த 4-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, நடிகர் அல்லு அர்ஜுன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரது 8 வயது மகன் காயமடைந்து ஆஸ்பத்திரியில் […]