கடலூர், ஜூலை 17– காராமணி குப்பத்தில் ஐடி ஊழியர், அவர் தயார் மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே காராமணி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார். ஐதிராபாத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டில் இன்று காலை சந்தேகப்படும்படியாக துர்நாற்றம் வீசுவதாக கூறி அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். […]