செய்திகள்

இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவிலை மீண்டும் கட்டிக் கொடுக்க அறநிலையத்துறை சம்மதம்

சென்னை, ஜூலை 10– இடிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் மீண்டு கட்டிக் கொடுக்கப்படும் என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிள்ளையார் கோவிலை காணவில்லை என தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐ கோர்ட் முடித்து வைத்துள்ளது. சென்னை, என்.எஸ்.சி. பொஸ் சாலையில் வ.உ.சி. நகரில் அமைந்திருந்த செல்வ சுந்தர விநாயகர் கோவிலை காணவில்லை எனவும், நூறாண்டு பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு, அங்கு மாநகராட்சி, குப்பை தொட்டிகளை வைத்துள்ளதாக கூறி, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

ஆரூத்ரா கோல்டு நிறுவன இயக்குநர் ரூசோ ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை, ஜூலை 10– ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரூசோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், தங்களிடம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனிடையே, இந்த […]

Loading

செய்திகள்

கோவில் நிதியை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடெல்லி, ஜூலை9- கோவில் நிதியை ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவர் பி.ஆர்.ரமணன் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாட்டில் கோவில்களுக்கு வரும் உண்டியல் பணம் உள்ளிட்ட நன்கொடை நிதியை செலவிடும் திட்டம் குறித்தும், அந்த நிதி அத்தியாவசியமற்ற வகையில் சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பொதுநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப் பட்டவற்றை மீண்டும் கோவில்களுக்கு அளிக்க வேண்டும்’ என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த […]

Loading

செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? : ஐகோர்ட் கேள்வி

அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை, ஜூன் 21– கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு” என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அண்ணா தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு […]

Loading

செய்திகள்

தடை விதித்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களை அனுமதிப்பது ஏன்?

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி சென்னை, ஜூன்.15- சுப்ரீம் கோர்ட் தடை விதித்து இருந்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களை சாலைகளில் ஓட இன்னும் அனுமதிப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். தனியார் வாகனங்களில் அரசு, போலீஸ், ஊடகம், வக்கீல், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் […]

Loading

செய்திகள்

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ‘இ-பாஸ்’ கட்டாயம்

மே 7-ந் தேதி முதல் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஏப்.30- கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ‘இ–பாஸ்’ கட்டாயமாக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை மே 7-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் […]

Loading