செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர், பிப்.13– சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. […]