செய்திகள்

கழுகு மோதியது: பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து

அமராவதி, செப்.4– விஜயவாடாவில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கழுகு மோதியது. இதனையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது, அதன் மீது கழுகு மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, விமானத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் […]

Loading

செய்திகள்

வானில் பறக்கும்போது யந்திரக் கோளாறு: 154 பேருடன் சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் அவசரமாக மும்பை திரும்பியது

மும்பை, ஜூன் 28– மும்பையில் இருந்து 154 பேருடன் நள்ளிரவில் சென்னைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு மீண்டும் அவசரமாக மும்பைக்கு திரும்பி சென்று தரை இறங்கியது. மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு (27–ந்தேதி) 11 மணிக்கு 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் சென்னைக்கு புறப்பட தயாரானது. ஆனால் அந்த விமானம் தாமதமாக, நள்ளிரவு 12 […]

Loading

செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலி: விமான கட்டணங்கள் 24% வரை குறைவு

சென்னை, ஜூன் 21– கடந்த வாரம் ஏர் இந்தியா போயிங் 787 டிரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் ஏர் இந்தியா விமானக் கட்டணங்கள் 24 சதவீதம் வரையில் குறைந்துள்ளன. விமானங்கள் ரத்து பயண தளமான ixigo வழங்கிய தகவலின்படி, பயணத்திற்கு 0-15 நாட்களுக்கு முன்பு வாங்கப்படும் முன்கூட்டியே புக் செய்யும் (APD) கட்டணங்கள், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடுமையான வீழ்ச்சியைக் காட்டுகின்றன. ஜூன் 13-19 தேதிகளுக்கான சராசரி ஒரு வழி […]

Loading

செய்திகள்

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து

புதுடெல்லி, ஜூன் 20– ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் – இஸ்ரேல் வான்வெளி மூடல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு 15 சதவிகித சேவைகளை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று நிர்வாக காரணங்களுக்காக 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஐ906 துபாய் – சென்னை, […]

Loading

செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்

புதுடெல்லி, ஜூன் 18– இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் அங்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது. தலைநகர் டெல்லியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் பாலி தீவிற்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், பாலி தீவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால், பாலி விமான நிலையம் அருகே கடும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், விமானம் தரையிறங்க முடியாத […]

Loading

செய்திகள்

விமான விபத்து: ‘ஏர் இந்தியா’ ரூ.1,000 கோடி ‘இன்சூரன்ஸ் கிளைம்’?

புதுடெல்லி, ஜூன் 14– குஜராத்தில் ஏற்பட்ட ‘ஏர் இந்தியா’ விமான விபத்து, நம் நாட்டின் விமான வரலாற்றிலேயே மிகப்பெரிய இன்சூரன்ஸ் கிளைமை பதிவு செய்யும் என, தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்காக ஏர் இந்தியா 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்சூரன்ஸ் கிளைம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமானது. தற்போது இது டாடா குழுமத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவ வீரர்களுக்கு சல்யூட்

சலுகையை அறிவித்த ஏர் இந்தியா புதுடெல்லி, மே 8– ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய ராணுவத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 26 இந்தியர்களை கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. சுமார் 25 நிமிடங்கள் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் 9 கூடாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினரின் இந்த […]

Loading