திருவள்ளூர், டிச. 27– தொடர் மழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிருந்து 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் பூண்டி ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் மழைநீர் […]