செய்திகள்

அண்ணா தி.மு.க. ஆட்சி அமைக்கும்: பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை, மார்ச் 18– தமிழகத்தில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தாராபுரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக […]

செய்திகள்

பாரதீய ஜனதா போட்டியிடும் ஆயிரம் விளக்கு, துறைமுகம் உள்ளிட்ட 20 தொகுதிகள் பட்டியல் அறிவிப்பு

சென்னை, மார்ச்.11-– அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதா போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணி பா.ம.க., பாரதீய ஜனதா, த.மா.கா. மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.விற்கு 23 தொகுதிகளும், பாரதீய ஜனதாவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அண்ணா தி.மு.க., பா.ம.க. மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் போட்டியிடும் […]

செய்திகள்

மு.க.ஸ்டாலின் அறிவித்தது மத்திய அரசின் திட்டங்கள்

சென்னை, மார்ச் 9– மத்திய அரசின் திட்டங்களையே தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களாக அறிவித்துள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்திய அரசு ஏற்கனவே ஜல் ஜீவன் மிஷன், அனைவருக்கு வீடு கட்டும் திட்டம், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இலவச இணைய வசதி […]

செய்திகள்

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை

சென்னை, மார்.1–- அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் […]

செய்திகள்

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்

பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி சேலம், பிப்.3- அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள முடிவை நாங்கள் ஏற்கிறோம் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார். சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சேலம் கமலாபுரம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். […]