புதுடெல்லி, ஆக.2– ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கும்’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார். லோக்சபாவில், நட்டா பேசுகையில், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம். தொழில்நுட்பக் காரணங்களால் தான் கட்டுமான பணிகள் தாமதம் ஆனது. மிக விரைவில் துவங்கும். எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் திறக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்’ என்றார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் சிகிச்சைக்காக டெல்லிக்கு வர வேண்டியதில்லை. இதுவரை 17 […]