செய்திகள்

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்

ரூ.1,000 கோடி நிவாரணம் வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தல் டெல்லி, டிச. 02– தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளதுடன், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகள் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக விழுப்புரம், புதுச்சேரி, […]

Loading

செய்திகள்

கனிமொழி எம்பியின் பெயரை தவறாக பயன்படுத்தினேன்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரிய போதைஇளைஞர்

கோவை, அக். 03– நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு போதை இளைஞர் மன்னிப்புக் கோரி உள்ளனர். கோவையில் 1 ந்தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் நான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் தம்பி என்று கூறியுள்ளார். இது தொடர்பான காணொலி வெளியாகி வைரலானது. இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். தப்பிக்க செய்த தவறு விசாரணையில், அவர் காவல்துறையினரிடமிருந்து […]

Loading

செய்திகள்

நான் 4 முறை சுயேட்சையாக வென்றவன்: எனக்கு நீங்கள் பாடம் நடத்த வேண்டாம்

பாஜகவுக்கு பப்பு யாதவ் எம்பி பதிலடி சென்னை, ஜூன் 26– நான் 4 முறை சுயேட்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன், கட்சி ஆதரவுடன் வென்ற நீங்கள் எனக்கு பாடம் நடத்தாதீர்கள் என்று பீகார் சுயேட்சை எம்பி பப்பு யாதவ் நாடாளுமன்றத்தில் பதிலடி தந்துள்ளார். கடந்த மே மாதம் நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக நாடு முழுவதிலிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கின. அதிலும், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் தடுக்கப்பட்ட திமுக எம்பி: மன்னிப்பு கேட்ட அதிகாரி

டெல்லி, ஜூன் 20– நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிஐஎஸ்எஃப் அதிகாரி மன்னிப்புக் கேட்டுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலர்களால் (CISF) தடுத்து நிறுத்தபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை கோரி மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், ‘நேற்று பிற்பகல் […]

Loading