சென்னை, செப்.15-– என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நடப்பாண்டில் 72 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 2024-–25-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 950 காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-–மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் 836 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு […]