அடிஸ் அபாபா, ஜூலை 24- ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததால், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோபா மண்டலத்தில் கெஞ்சோ–ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது. […]