சென்னை, ஜன. 2– சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது, இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. தற்போது ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவி வருவதால் இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், […]