சென்னை, பிப். 5– மதுரை- – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகி அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து சென்னைக்கு வாரம் இருமுறை சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.22624) மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னையில் இருந்து (வ.எண்.22623) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.50 […]