செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு

சென்னை, ஜூன்.7- சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை ரெயில்வே கோட்டம் மின்சார ரெயில் சேவையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 151 ஆக இருந்த மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கையை, 208 ஆக சென்னை ரெயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை ஒட்டி இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

செய்திகள்

தமிழகத்தில் 13–ந்தேதி வரை வங்கி வேலை நேரம் குறைப்பு

சென்னை, ஜூன்.6- தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:– வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், வங்கி பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல் பகல் 2 மணி வரை மட்டும் […]

செய்திகள்

ஊரடங்கு காலத்தில் வங்கிகள் செயல்படும் நேரம்: வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

சென்னை, மே.24- காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கி சேவை வழங்கப்பட்டு வந்த நடைமுறையே முழு ஊரடங்கு காலத்திலும் நீட்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் ‘கன்வீனர்’ எஸ்.சி. மொகந்தா, தமிழகத்தில் தங்கள் குழுமத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழக அரசு ஊரடங்கினை வருகிற 31-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. ஏ.டி.எம். மையங்கள் […]

செய்திகள்

‘இ–பதிவு’ மூலமாக திருமணத்துக்கு செல்ல அனுமதி மறுப்பு

சென்னை, மே 23– ‘இ–பதிவு’ மூலமாக திருமணத்துக்கு செல்ல அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கும் ‘இ–பதிவு’ கட்டாயம் என அரசு அறிவித்தது. அதன்படி திருமணம், மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்களுக்காக […]

செய்திகள்

மே 31–ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம்: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, மே 11– இம்மாதம் 24–ந்தேதி வரை ஊரடங்கு அமுலில் இருப்பதால் மின் கட்டணம் செலுத்த இம்மாதம் 31–ந்தேதி வரை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– கோவிட்–19 பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 10.5.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, முதல்வர் அறிவுறுத்தலின்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் […]

செய்திகள்

14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி, ஏப்.27– கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டுகிறது. மாநில அரசுகள் ஊரடங்கை எப்போது, எவ்வாறு அமல்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் […]

செய்திகள்

ராஜஸ்தானிலும் இரவு நேர ஊரடங்கு அமல்

ஜெய்ப்பூர், ஏப். 15– ராஜஸ்தான் மாநிலத்தில் நாளைமுதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அம்மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி தொடங்கி காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு நேர […]

செய்திகள்

ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை, மார்ச் 31– தமிழகத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்கலாம் கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை […]

செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை, மார்ச்.29- கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேற்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் […]

செய்திகள்

நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வார ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின மும்பை, மார்ச் 15– மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் 21–ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாக்பூர் […]