செய்திகள்

ரெம்டெசிவிர் கொரோனாவைக் குணப்படுத்தாது: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

சென்னை, மே 16– ரெம்டெசிவிர் மருந்து, கொரோனாவை குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. முதல் பரவலின்போதே, ரெம்டெசிவிர் மருந்துக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. அதற்குப் பின் அம்மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது, ஆய்வு முடிவிலும் அது பற்றி கூறப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020க்குப் […]

செய்திகள்

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய வைரஸ் கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு வேதனை

புதுடெல்லி, மே 11– இந்தியாவில் பரவி வரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் […]

செய்திகள்

பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனிவா, மே.10– பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகளைப் பல்வேறு முன்னேறிய நாடுகள் கண்டறிந்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன. […]

செய்திகள்

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

நியூயார்க், மே 8– சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ பயன்பாடு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர […]