செய்திகள்

75 % தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட 10 நாடுகள்:உலக சுகாதார அமைப்பு வேதனை

சென்னை, ஜூலை 23– உலகிலுள்ள தடுப்பூசிகளை 75 சதவீதத்தை, 10 நாடுகள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது என்று, உலக சுகாதார நிறுவனம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறும்போது, “கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்றார். 10 நாடுகளே எடுத்துக்கொண்டது […]

செய்திகள்

இரு வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது ஆபத்தானது : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா, ஜூலை 13– இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது என்பது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது. தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]

வாழ்வியல்

அதிகரிக்கும் தட்டம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிக மோசமான தொற்று நோய்களில் ஒன்று தட்டம். இந்த நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 2018ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 300% இந்தோய் பாதிப்பு உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டிலும் நடப்பு 2021ஆம் ஆண்டிலும் அம்மை நோயின் தாக்கம் குறையவில்லை என்று […]

செய்திகள்

60 சதவீத தடுப்பூசி பெற்ற 3 நாடுகள்- உலக சுகாதார அமைப்பு தகவல்

வாஷிங்டன், ஜூன் 6– உலக அளவில் இதுவரை வினியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60 சதவீதம் 3 நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 சதவீதத் தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளிடமே சென்றடைந்துள்ளன. கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் […]

செய்திகள்

5 தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

வாஷிங்டன், ஜூன் 3– உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு […]

செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது

புதுடெல்லி, ஜூன் 2– மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக தனி நபர் அல்லது அமைப்புகள் செய்த பணிகளை பாராட்டி உலக சுகாதார அமைப்பு ஆண்டுதோறும் சிறப்பு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குனரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் […]

செய்திகள்

‘கொரோனா’ உகான் ஆய்வகத்திலேயே தோன்றியது: இங்கிலாந்து உறுதி

லண்டன், மே 31– ‘சீனாவின் உகான் ஆய்வகத்திலிருந்து கசிந்த வைரஸ் தான் கொரோனா என்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது’ என, இங்கிலாந்து உளவு அமைப்புகள் உறுதிபட நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உகான் ஆய்வகத்தில் 2019–ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை வெளியானது. இதைத் தொடர்ந்து, ‘கோவிட் தொற்றின் தோற்றம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என அமெரிக்க […]

செய்திகள்

ரெம்டெசிவிர் கொரோனாவைக் குணப்படுத்தாது: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

சென்னை, மே 16– ரெம்டெசிவிர் மருந்து, கொரோனாவை குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. முதல் பரவலின்போதே, ரெம்டெசிவிர் மருந்துக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. அதற்குப் பின் அம்மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது, ஆய்வு முடிவிலும் அது பற்றி கூறப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020க்குப் […]

செய்திகள்

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய வைரஸ் கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பு வேதனை

புதுடெல்லி, மே 11– இந்தியாவில் பரவி வரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் […]

செய்திகள்

பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனிவா, மே.10– பின்தங்கிய 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பூசிகளைப் பல்வேறு முன்னேறிய நாடுகள் கண்டறிந்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன. […]