செய்திகள்

திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரெயில் மோதி உயிரிழப்பு

திருப்பூர், ஜூலை 1– திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியில் கட்டிடப் பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் சரவணபவன்( 28) ஆகிய இருவரும் திருப்பூரில் தங்கி பணி செய்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அன்றாடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து டீ குடிக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சாத்தூர், ஜூன் 29– சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல் பட்டாசு ஆலையில் உற்பத்தி தொடங்கியது. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, ஜூன் 8– இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 217 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 32 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,40,036 […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 32 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, ஜூன் 2– இந்தியாவில் புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 57 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,39,872 […]

Loading