ராமநாதபுரம், ஜன. 2– ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மற்றும் அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் […]