செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு : ரூ.50,800க்கு விற்பனை

சென்னை, ஆக. 8– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.50,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அவ்வப்போது சற்று குறைவதும், அதிரடியாக விலை உயர்வதுமாக விற்பனையாகி வந்தது. ஒரு சவரன் 55 ஆயிரத்தை தொட்டது. கடந்த மாதம் 23ம்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலை சரிந்தது. இந்த வார […]

Loading

செய்திகள்

மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் உயர்வு

சென்னை, ஜூலை19-– மின்சார கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்முனை இணைப்புக்கான டெபாசிட் ரூ.2 ஆயிரத்து 145 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83 சதவீதம் அதிகரிக்கிறது. இந்த […]

Loading

செய்திகள்

மின் கட்டண உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை , ஜூலை 15:வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டுக்கு மேல் மின்சார கட்டணம் உயர்வு. ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 401 முதல் 500 யூனிட் வரை ஏற்கனவே ரூ. 6.15 என இருந்த கட்டணம், ரூ. 6.45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரை இருந்த கட்டணம், ஏற்கனவே ரூ. 8.15 இருந்து தற்போது ரூ. 8.55-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 800 […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை, ஜூலை 12– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ரூ.54,000க்கு மேல் விற்பனையாகி வருகின்றது. நேற்று ஒரு சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.54,280க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ.54,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் ரூ.6,825-க்கு விற்பனையாகிறது.வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு […]

Loading

செய்திகள்

மாமல்லபுரம் சுங்கசாவடி கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு

சென்னை, ஜூன் 12– மாமல்லபுரம் சுங்கசாவடி கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்க கட்டண உயர்வு தேர்தல் காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கடந்த 2-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கட்டண உயர்வானது அமலுக்கு வந்தது. இந்நிலையில், அக்கரை மற்றும் மாமல்லபுரம் இடையே உள்ள சுங்கசாவடியில் இன்று […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு

மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது சென்னை, மே 18– சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரு சவரன் ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த 10–ந்தேதி […]

Loading