சென்னை, ஆகஸ்ட்5- தமிழகத்தில் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் (டி.ஆர்.ஓ.) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு மருத்துவப் பணிகள் பொது மேலாளர் கீதா, புதுக்கோட்டை டி.ஆர்.ஓ.வாக மாற்றப்பட்டார். பரந்தூர் தனி டி.ஆர்.ஓ. (நில எடுப்பு) நாராயணன், நீலகிரிக்கு மாற்றப்பட்டார். சென்னை தலைமைச் செயலக தனி அலுவலர் ராமபிரதீபன், திருவண்ணாமலை டி.ஆர்.ஓ.வானார். இந்துசமய அறநிலையங்கள் துறை தனி அலுவலர் -2 ஜானகி, சென்னை மாவட்ட […]