செய்திகள்

3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை

சென்னை, பிப்.15-– ‘‘இன்னும் 3 மாதத்தில் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார். இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கும் நிகழ்வு சென்னை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தமு இந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தவர், மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். விழாவில் […]

Loading

செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா: துணை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்

சென்னை, டிச.21-– சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று தொடங்கியது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். பின்னர், ஒவ்வொரு அரங்குக்கும் நேரில் சென்று உணவு வகைகள் குறித்து […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் 3–வது இருக்கை

சென்னை, டிச.9– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தப்படியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3–வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவல்லிக்கேணி–சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று சட்டசபைக்கு வந்த உதயநிதிக்கு, 3-வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருக்கு முதல் வரிசையில் 10வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், துணை […]

Loading

செய்திகள்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடியில் மாணவர்கள், மாணவிகள் விடுதிகள்

ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, டிச.4– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் 5.7.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர், 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் […]

Loading

செய்திகள்

சென்னையில் மழை நிவாரண பணிகள்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை, டிச.1– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயல், மழை பெய்த போதும், கால்வாய்களில் மழைநீர் தங்குதடையின்றி சென்று கொண்டிருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார். சென்னை பெருநகர மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பெஞ்சல் புயலினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு […]

Loading

செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் முத்தமிட்டு வாழ்த்து

அண்ணா, கருணாநிதி சமாதியில் மரியாதை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்க நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். முன்னதாக சென்னை […]

Loading

செய்திகள்

விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு

விழுப்புரம், நவ. 6 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (5–ந் தேதி) இரவு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலமேடு பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளி செயல்பட்டு வருகின்றது. பள்ளி தகவல் தொகுப்பு மேலாண்மை அமைப்பின் (எமிஸ்) மூலமாக பெறப்பட்ட தகவல்களில், மாணவ, மாணவிகளின் கல்வித் தகுதிகளின் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணி

சென்னை, அக்.28 துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்கவேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கித் தந்தார். சென்ற 2022–ம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான 225 மீட்டர் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ‘மலையேற்றத் திட்டத்தை’ தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, அக் 25 இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புக்கு வலுசேர்க்கும் விதமாகவும் தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் சார்பில் தமிழ்நாடு மலையேற்றத் திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மலையேற்றத் திட்டம், […]

Loading

செய்திகள்

“நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்”: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல், அக்.22–- ‘நான் சொல்லாததை, சொன்னதாக திரித்து இந்தியாவில் பல நீதிமன்றங்களில் வழக்கு போட்டுள்ளனர். நான் கருணாநிதியின் பேரன் எதற்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று திண்டுக்கல்லில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்தின் மகன் ஆண்டிச்சாமி- – ராதாதேவி ஆகியோரின் திருமணம், நத்தம் அருகே விளாம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி […]

Loading