செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடுக்கு தடை: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி, ஜூலை 20– தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு காரணமாக, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் பங்கேற்பு மிகவும் அடிமட்டத்தில் இருந்த காரணத்தினால், தமிழ்நாடு அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இந்த […]

செய்திகள்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி, ஜூன் 22– தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

செய்திகள்

கடன் தவணை செலுத்த சலுகை வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி, ஜூன் 12– கொரோனா 2-வது அலையை காரணம் காட்டி வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர் வங்கியில் வாங்கிய கடன் தவணையை செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல தற்போது கொரோனாவின் 2-வது அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மறுப்பு இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், […]

செய்திகள்

தடுப்பூசி விலை -மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி, ஜூன் 3– இதுவரை தடுப்பூசி எடுக்காத மக்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப் போகிறீர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கவில்லை என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய வழக்கில் இன்று எழுத்து மூலமான இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு உரிய தடுப்பூசி கொள்கை வகுக்காமல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்துவது குறித்து நீதிபதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மறுபரிசீலனை செய்க.. […]

செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 9,346 குழந்தைகள்

டெல்லி, ஜூன்.2– நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன் வந்து விசாரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து, மாநில அரசுகள் பதிலளிக்க […]

செய்திகள்

மராத்தா சமூகத்தின் இடஒதுக்கீடு: ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 5– மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2018 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும், 50 சதவீதத்துக்குமேல், மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டின் தீர்ப்புக்கு மாறாக, மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, மொத்த இட […]