நாடும் நடப்பும்

ரூபாய் மதிப்பு சரிவு

தலையங்கம் இந்திய பொருளாதாரம் அடுத்து சந்திக்க இருக்கும் மிகப்பெரிய சவால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்புதான் நமது பொருளாதார நிபுணர்கள் கவனித்து வரும் முக்கிய பொருளாதார குறியீடு ஆகும். முதல் முறையாக நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.77.65 இருந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். இப்படி ஒரு வீழ்ச்சி ஏன்? கடந்த 2 ஆண்டுகளாக உலக பொருளாதாரம் மிகப்பெரிய சரிவுகளை சந்தித்தது அல்லவா? அதனால் சரக்குகள் […]

செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைன், ரஷ்ய அதிபர்களை சந்திக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர்

ஜெனீவா, ஏப்.23– ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரேஸ் அடுத்த வாரம் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களை சந்திக்க இருக்கிறார். வரும் 26–ந்தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும், 29–ந்தேதி அன்று உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியையும் வெளியுறவு அமைச்சர் குலேபாவையும் அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பை ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த சந்திப்புகளை சாத்தியமாக்க வேண்டும் என்று ரஷ்யா, உக்ரைனுக்கு ஐ.நா. சார்பில் கடிதம் எழுதப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி […]

செய்திகள்

இந்தியா – ரஷ்யாவை சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை: அமெரிக்கா

வாஷிங்டன், ஏப்.23– இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று பெண்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன் செய்தி தொடர்பு செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை என்பதை இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். அதேநேரத்தில், இந்தியாவுடன் நாங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிக்கிறோம். இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் கவனத்தில் […]

செய்திகள்

உக்ரைன் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்

கீவ், மார்ச் 23– உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் ‘சூப்பர் பவர்’ வெடிகுண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவ நேற்றிரவு அந்நகரின் மீது 2 ‘சூப்பர் பவர்’ (ஹைப்பர்சோனிக் ஏவுகணை) வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது அலை அலையாக பாய்ந்து சென்று வெடிகுண்டுகளை வீசி […]

செய்திகள்

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுவதை பல்கலைக்கழகங்கள் தடுத்தன

மாநிலங்களவையில் ஜெய்சங்கர் அறிக்கை புதுடெல்லி, மார்ச்.16- உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற வேண்டாம் என்று உக்ரைன் பல்கலைக்கழகங்கள் நிர்பந்தம் செய்ததாக மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பிப்ரவரி 24-ந் தேதி ரஷ்யா’ –உக்ரைன் இடையே போர் மூண்டது. அதற்கு முன்பே இந்தியா தயார் நிலையில் இருந்தது. உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து […]

செய்திகள்

ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையம் மீட்பு

சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் உக்ரைன் தகவல் கீவ், மார்ச் 14– ரஷிய ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த செர்னோபில் அணுமின் நிலையம் மீட்கப்பட்டதாக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திடம் உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுத்த ரஷிய படைகள் தொடர்ந்து 19-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செர்னோபில் அணு உலை பகுதியை […]

செய்திகள்

உக்ரைன் தாக்குதலில் 41 குழந்தைகள் உள்ளிட்ட 549 பொது மக்கள் பலி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கீவ், மார்ச் 11– உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 லம்சம் பேர் அகதிகளாகி உள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அதன் மீது கடந்த 24ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மற்றொரு புறம் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், செர்னிகிவ், கெர்சன், மரியுபோலில் தாக்குதலைத் […]

செய்திகள்

உக்ரைனில் இருந்து இதுவரை 1,464 தமிழகம் மாணவர்கள் மீட்பு

திருச்சி சிவா எம்.பி. தகவல் புதுடெல்லி, மார்ச்.11- உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்பதற்காக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய மீட்புக்குழுவினர் டெல்லியில் தங்கியிருந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த 6 மாணவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர். அப்போது தங்களை மீட்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து குழு தலைவர் […]

செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் ஸ்டாலின் நேரில் உரையாடல்

நெல்லை, மார்ச்.8- உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் உள்ள மாணவி நிவேதிதா வீட்டில் வைத்து, உக்ரைனில் இருந்து திரும்பிய ஏனைய மாணவிகள் திவ்யபாரதி, ஹரிணி, மாணவன் நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் […]