செய்திகள்

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்

சென்னை, மார்ச் 1– நடிகை அளித்த பாலியல் புகாரில் நேற்று வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜரான நிலையில் இடைத்தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் வழங்க 2வது நாளாக ஈரோடு போலீசார் நீலாங்கரைக்கு சென்றுள்ளனர். நடிகை அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் முன்பு சம்மனை போலீசார் […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் லாரி மீது கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

ஈரோடு, மார்ச் 1– தமிழக கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம் தாளவாடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். 5 பேரும் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு தேர்தல்: இன்றுடன் பரப்புரை நிறைவு

ஈரோடு, பிப். 3– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதையொட்டி, தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் மறைந்தார். இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், […]

Loading

செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு, ஜன. 23– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நேரடி மோதலில் உள்ளன. அண்ணா தி.மு.க., தே.மு.தி.க, பா.ஜ.க., மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு, ஜன. 21– ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ந் தேதி தொடங்கி 17ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் […]

Loading

செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: த.வெ.க. அறிவிப்பு

சென்னை, ஜன. 17– ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த […]

Loading

செய்திகள்

‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தில் 2 செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 3 மீட்டராக குறைப்பு

சென்னை, ஜன.12-– ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா தி.மு.க. அறிவித்துள்ளது. அதேபோல் தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5–-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் நேற்று முன்தினமே தொடங்கி விட்டது. இந்தமுறை அந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டது. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியில்லை

சென்னை, ஜன.10- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போவதில்லை, யாருக்கும் ஆதரவும் தர போவதில்லை என்று தெரிவித்துள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அண்ணா தி.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா? என்பது […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை

சென்னை, ஜன. 4– ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் […]

Loading

செய்திகள்

50% தள்ளுபடி விற்பனை: ஈரோடு ஜவுளிக்கடைகளில் இன்று அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்

ஈரோடு, நவ. 1– ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் பெற்ற நகரமாக ஈரோடு விளங்குகிறது. இங்கு வாரம் தோறும் நடைபெறும் ஜவுளிச்சந்தையில், குறைந்த விலையில் அனைத்து வகையான ஜவுளி ரகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஈரோட்டில் செயல்படும் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில், தீபாவளிக்கு அடுத்தநாள் (இன்று), ‘ஸ்டாக் கிளியரன்ஸ்’ என்ற […]

Loading