சென்னை, பிப். 10– சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றார். இதனால் 90,629 வாக்குகள் […]