செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல்: 90 % காசா மக்கள் இடப்பெயர்வு

ஐநா தகவல் நியூயார்க், ஜூலை 9– இஸ்ரேல் நாட்டின் அடாவடி தாக்குதலால், காசாவில் உள்ள 90 சதவீத மக்கள் இடம்பெயர்ந்தள்ளனர் என்று ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காசா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் நரகமாக மாறிய காசாவின் மேற்குக்கரை : ஐநா வேதனை

காசா, ஜூன் 27– காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தற்போது மிகவும் மோசமாக இருந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் காசா ஒரு நரகம் போல்தான் இருக்கும் என்று ஐநா வேதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால், காசாவில் மருத்துவமனைகள், ஐநா அலுவலகங்கள் தவிர்த்து அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு எட்டு மாதங்களாக போர் கொடூரமாக நடைபெற்று வருகிறது. 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

அமெரிக்க எதிர்ப்பையும் மீறி ஐநாவின் நிரந்தர உறுப்பினராக பாலஸ்தீனம்

இந்தியா உள்பட 143 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம் நியூயார்க், மே 11– ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,000 க்கும் மேற்பட்டோர் […]

Loading

செய்திகள்

போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்: இஸ்ரேல் நிலைப்பாடு என்ன?

காசா, மே 7– காசாவின் ராஃபா நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில், எகிப்து-கத்தார் முன்மொழிந்த போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: மேலும் 2 பேர் பலி

தெக்ரான், ஏப். 24– ஈரான் ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இன்று காலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழிப்பதாக கூறிய இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது. இதற்கிடையே, ஈரான் தூதரகத்தை […]

Loading