சென்னை, மார்ச் 10– ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்னும் சாதனையை படைத்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார். லண்டனில் உள்ள உலக புகழ்பெற்ற ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் 8–ந்தேதி அன்று தனது மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, ‘வேலியன்ட்’ சிம்பொனியை அரங்கேற்றினார். […]