செய்திகள்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை, டிச. 21– நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்தவகையில் அக்கரைப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்

ராமேஸ்வரம், டிச. 5– கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பிரிக்சில் இணையவரும் இலங்கை

தலையங்கம் இலங்கை, பிரிக்சில் இணைவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது, இது புதிதாக பதவி ஏற்று இருக்கும் இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. பிரிக்சின் தலைவர்கள், இலங்கை சேரத் தயாராகுவதை கண்டிப்பாக வரவேற்ப்பார்கள். ஆசிய கடல் பகுதியில் மையமாக உள்ளதுடன், பொருளாதாரப் பாதுகாப்புத் துறைகளில் சக்தியாக மாறுவதற்கு இலங்கை தயாராக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டனியில் இலங்கைக்கு சேர வாய்ப்பு கிடைத்துவிட்டால் நிதி ஆதாரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் வர இருக்கும் புதிய பிரிக்ஸ் பணம் போன்ற […]

Loading

செய்திகள்

மாவீரர்கள் நினைவேந்தலுக்கு இனி எந்தவித தடையும் இல்லை

இலங்கை அதிபர் அநுர அரசு அறிவிப்பு கொழும்பு, நவ. 26– விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆண்டுதோறும் ஈழ விடுதலைக்கு பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் நினைவாக, மாவீரர்கள் நாள் கடைபிடித்து வருவதை, இலங்கை அரசு இதுவரை தடுத்து வந்த நிலையில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர திசநாயக்க அரசு, மாவீரர்கள் நாள் கடைபிடிக்க தடை இல்லை என்று அறிவித்துள்ளார். “தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை கடைபிடிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் […]

Loading

செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு

பிரதமராக ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பு கொழும்பு, செப். 25– இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 2025 வரை இருக்கிறது. ஆனாலும், தேர்தல் வாக்குறுதியில் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைப்பதாகத் தெரிவித்திருந்ததன்படி, புதிய இலங்கை அதிபராக பொறுப்பேற்ற அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 14-ம் தேதி பொதுத் […]

Loading

செய்திகள்

இலங்கை: ஜனாதிபதி தேர்தல் யாருக்கு சாதகம்?

தலையங்கம் இலங்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ந்தேதி நடைபெற இருக்கிறது. ‘தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு’ இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளது. அதை தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர். இப்படியாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே […]

Loading

செய்திகள் முழு தகவல்

இலங்கை தேர்தலில் எத்தனைக் குழப்பம்

கொழும்பு, செப் 2 இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே, தனது ஐக்கிய தேசிய கட்சியை விடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், தமிழர் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை கடந்த மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் 4 ந் தேதி முதல், தபால் […]

Loading