செய்திகள்

இலங்கை: ஜனாதிபதி தேர்தல் யாருக்கு சாதகம்?

தலையங்கம் இலங்கையில் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ந்தேதி நடைபெற இருக்கிறது. ‘தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பு’ இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானித்துள்ளது. அதை தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக அறிவித்துள்ளனர். இப்படியாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழர் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவது இதுவே […]

Loading

செய்திகள் முழு தகவல்

இலங்கை தேர்தலில் எத்தனைக் குழப்பம்

கொழும்பு, செப் 2 இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே, தனது ஐக்கிய தேசிய கட்சியை விடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், தமிழர் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை கடந்த மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் 4 ந் தேதி முதல், தபால் […]

Loading

செய்திகள்

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: வாரத்தில் 3 நாட்களாக குறைப்பு

நாகப்பட்டினம், ஆக. 21– பயணிகள் வருகை குறைவால், நாகை -இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் இனி வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை -– இலங்கையின் காங்கேசன்துறை துறை முகம் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். ‘செரியாபாணி’ என்ற பெயரிலான கப்பல் சேவை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அம்மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், […]

Loading

செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல் செலவுக்கு உச்சவரம்பு: ரூ.187 கோடி செலவளிக்க வேட்பாளருக்கு அனுமதி

கொழும்பு, ஆக. 21– இலங்கை அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு முதன்முறையாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு , ரூ.187 கோடி வரையில் செலவளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு […]

Loading

செய்திகள்

இலங்கை தேர்தல்: விக்ரமசிங்கேவுக்கு 30 க்கும் மேற்பட்ட கட்சிகள் திடீர் ஆதரவு

கொழும்பு, ஆக. 17– இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரசிங்கவுக்கு 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2022 இல் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள்கூட கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் அல்லல்படும் அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு மக்கள் தீவிரப் போராட்டங்கள் நடத்தியதன் தொடர்ச்சியாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவியை விட்டு ராஜிநாமா செய்தார். பெருகும் ஆதரவு இந்த […]

Loading

செய்திகள்

ரூ. 5 ஆயிரம் கட்டணத்தில் நாகை –- இலங்கை இடையே 16–-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து

இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு துவக்கம் நாகப்பட்டினம், ஆக. 12– நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வரும் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. இதன்படி வரும் வெள்ளிக்கிழமை அன்று சிவகங்கை என்ற கப்பல் இலங்கையின் காங்கேசன் துறைக்கு இயக்கப்பட உள்ளது. இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நபருக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், […]

Loading

செய்திகள்

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 15 ந்தேதி மீண்டும் கப்பல் போக்குவரத்து?

நாகை, ஆக. 7– நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை முகத்துக்கு கப்பல் சேவை ஆகஸ்ட் 15 ந்தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023 அக்டோபர் 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைத்தார். நாகை துறைமுகத்தில் ஒன்றிய துறைமுகங்கள் துறை அமைச்சர், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம், ஆக. 2– இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்வது, சுட்டுக்கொல்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர்.இதற்கிடையில், நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் சென்ற படகில் இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில் மலைச்சாமி […]

Loading

செய்திகள்

இலங்கையில் செப்டம்பர் 21 ந்தேதி அதிபர் தேர்தல்; ஆகஸ்ட் 15 வேட்பு மனு

அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு இலங்கை, ஜூலை 26– இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ந்தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி புரட்சி செய்தனர். இதனை தொடர்ந்து அப்போது இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். மேலும், தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதனால் […]

Loading

செய்திகள்

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

ராமேஸ்வரம், ஜூலை 23– நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் […]

Loading