மும்பை, அக். 11– பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா, தொழில் அதிபர்கள் அஞ்சலி செலுத்தினர். மும்பையில் அரசு மரியாதை யுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது. பிரபல தொழில் அதிபரான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. […]