செய்திகள்

கொரோனா அச்சத்தால் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் முடிவு

புதுடெல்லி, மே.6– பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களை கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இது சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது:– ‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் பிரிவு 151ஏன் படி, ஒரு தொகுதி காலியான 6 மாதங்களுக்குள், அந்த பதவிக்கான ஆயுள் ஒரு வருடமோ அதற்கு மேற்பட்டோ இருந்தால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தாத்ரா & நாகர் ஹவேலி, கந்த்வா […]

செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா: 1.27 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 8– இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மாதம் 5–ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

செய்திகள்

அதிகரிக்கும் கொரோனாவால் 4 வாரம் நெருக்கடியானதாக இருக்கும்- மத்திய சுகாதார துறை தகவல்

புதுச்சேரி, ஏப்.7– இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வி.கே.பால் கூறுகையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உயர்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு […]

செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: பிரதமருக்கு ஐஎம்ஏ பரிந்துரை

புதுடெல்லி, ஏப். 7– நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கழகம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 3 நாள்களாக இந்தியவில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையானது 1 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில், இந்திய மருத்துவக் கழகம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி […]

செய்திகள்

இந்தியாவில் 89 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 3- கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது .  24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 714 பேர் நோய்த்தொற்றுக்கு  பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து […]

செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா: இந்தியாவில் 81 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.2- இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 446- பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்து 446 ஆக உயர்ந்துள்ள நிலையில், 469 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா […]

செய்திகள்

மிக வேகமாக பரவும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி, மார்ச்.31- இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒட்டு மொத்த நாடும் ஆபத்தின் பிடியில் உள்ளதாக மத்திய சுகாதரத்துறை எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது:- நாட்டின் கொரோனா நிலவரம், மோசமான நிலையில் இருந்து மிக மோசமான நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக சில மாநிலங்களின் நிலைமை பெரிதும் […]