செய்திகள்

இந்தூர் தொகுதியில் 1.9 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் நோட்டா

இந்தூர், ஜூன் 4– மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் தொகுதியில் 1,89,566 வாக்குகளைப் பெற்று நோட்டா இரண்டாம் இடம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 1.20 மணி நிலவரப்படி இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வானி 10,63,842 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் நோட்டா 1,69,228 வாக்குகளைப் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் லக்‌ஷ்மன் சோலங்கி 44,828 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Loading

செய்திகள்

இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் பா.ஜ.க.வில் இணைந்தார்

இந்தூர், ஏப்.29– மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க. வேட்பாளருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். வாக்குப்பதிவிற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பு மனுவை காங்கிரஸ் வேட்பாளர் திரும்பப் பெற்றுள்ளார். ஏற்கனவே சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதால் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி […]

Loading