புதுடெல்லி, ஜூலை 20– தமிழக வீராங்கனை இந்துமதி கதிரேசனுக்கு இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருது வழங்கப்பட்டது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார். 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா […]