செய்திகள்

ஹஜ் அசோசியேஷன் தலைவர் பொங்கல் வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 13 பொங்கல் திருநாளையொட்டி இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலகம் முழுக்க பண்டிகைகள் பல படையெடுத்து வந்தாலும், திருவிழாக்கள் பல தேர்க்கோலம் பூண்டாலும், அத்தனையும் தாண்டி உயர்ந்து நிற்கும் ஒற்றைத் திருநாள் பொங்கல் திருநாள். குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும் அனைவரும் நம்பி வாழ்வது உணவைத்தான், உழவர்களைத் தான். அந்த வகையில் எத்தனை பண்டிகைகள் வந்தாலும் அத்தனையையும் தாண்டி […]