செய்திகள்

உரி நீர் மின் திட்டத்தை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் சதியை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது

ஸ்ரீநகர், நவ. 26: ஆபரேஷன் சிந்தூரின் போது உரி நீர்மின் திட்டத்தை தகர்க்க முயற்சித்த பாகிஸ்தானின் சதித்திட்டத்தை முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள முக்கியமான பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சி கேட்டுக் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மக்களுக்கு உதவிய இந்திய ராணுவம்

ஸ்ரீநகர், மே 17– ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் வீடு வீடாகச் சென்று, பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையே சண்டை நேரிட்டபோது, ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இந்த தாக்குதல்களின்போது பலர் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நன்கொடை

சென்னை, மே 16 – பஹல்காம் பகுதியில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்குவதாக எஸ்.ஆர்.எம். நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பஹல்காம் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு மற்றும் ஆயுதப் படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் எனும் வெற்றிகரமான […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’: தீவிரவாதத்திற்கு இந்தியா தரும் நேரடி பதிலடி

நாடும் நடப்பும் ஆர் முத்துக்குமார் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக மாறிய இந்தியா, இப்போது எந்த வெளிப்படையான முன்னறிவிப்பும் இல்லாமல், நேரடியாக துல்லியமான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தன் புதிய நோக்காக மாற்றியுள்ளது. புல்வாமா தாக்குதல் (2019) மற்றும் உரி தாக்குதல் (2016) ஆகியவற்றின் பின்னணியில், இந்தியா எச்சரிக்கையாக இருந்த போதிலும் இப்போது திடீர் […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி

சென்னை, மே.11- இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று பேரணி நடைபெற்றது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த வகையில் வீரத்துடன் பாகிஸ்தானின் தாக்குதலை எதிர்கொண்ட இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் `இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற தலைப்பில் மாபெரும் பேரணியானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிப்பு : புதிய வீடியோ வெளியிட்டு இந்திய ராணுவம் விளக்கம்

புதுடெல்லி, மே 10– பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது. னில் பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே தாக்கிய நிலையில், அந்த நாட்டு ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் பாகிஸ்தானின் […]

Loading

செய்திகள்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி

பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க அழைப்பு சென்னை, மே 9– பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், எனது தலைமையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில், ஒரு பேரணியை நாளை […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல்

டெல்லி, மே 9– பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடித்த இந்திய ராணுவம், அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தீவிரவாத முகாம்களை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத் தளங்களையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு […]

Loading