சென்னை, ஏப். 25– தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும். இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை […]