செய்திகள்

7 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 11 தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை

டெல்லி, ஜூலை 13– விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில், மத்திய பிரதேசம் அமர்வாரா, பீகார் தவிர மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் […]

Loading

செய்திகள்

சம்பாய் சோரன் ராஜினாமா: மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன்

ராஞ்சி, ஜூலை 4– ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்த, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் பதவியில் இருந்த போதே கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹேமந்த் சோரன் கைதான பின்னர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது […]

Loading

செய்திகள்

வினாத்தாளை கசிய விடுவதே அரசுதான்: அகிலேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி, ஜூலை 2– இளைஞர்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசே வினாத்தாளை கசியவிடுகிறது என்று மக்களவையில் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று சமாஜ்வாதி தலைவரும், அக்கட்சியின் மக்களவைக்குழுத் தலைவருமான அகிலேஷ் யாதவ் பேசினார். அவர் பேசியதாவது:– ”மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு தார்மீக வெற்றியாகும். இந்தியா கூட்டணிக்கான பொறுப்பை மக்கள் காட்டியுள்ளனர். இந்த தேர்தல் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. வினாத்தாள் ஏன் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்; பா.ஜ.க.– காங்கிரஸ் இடையே கடும் போட்டி

கருத்துக்கணிப்பு பொய்யானது பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை * மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்கரி முன்னிலை * நடிகை கங்கனா ரனாவத் முன்னிலை * மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு * வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் ராகுல் முன்னிலை பா.ஜ.க. கூட்டணி – 300; இந்தியா கூட்டணி – 225 முன்னிலை புதுடெல்லி, ஜூன் 4– நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதியம் […]

Loading

செய்திகள்

பல்வேறு கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தேசபந்து நாளிதழ் கணிப்பில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

சென்னை, ஜூன் 3– நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி பெரும்பான்மை பெற்று ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது எனவும் தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. நேற்றுடன் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்க 273 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி இந்நிலையில் தான் நேற்று நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

சர்வாதிகாரத்தை ஒழிக்க நாடு முழுதும் பிரச்சாரம் செய்வேன் என சூழுரை டெல்லி, மே 12– ‘ஜூன் 4 ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. […]

Loading

செய்திகள்

அமேதியில் போட்டியிட பயந்து ரேபரேலி ஓடினார் ராகுல் : பிரதமர் மோடி விமர்சனம்

கொல்கத்தா, மே 3– அமேதியில் போட்டியிட பயந்து காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தமான் – துர்காபூர் பகுதியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:– எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. ஓட்டுக்காக சமூகத்தை பிரிப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். இந்துக்களை 2 மணி நேரத்தில் ஆற்றில் வீசுவேன் என திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேசுகிறார். என்ன மாதிரியான அரசியல் கலாச்சாரம் […]

Loading

செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமரா? இந்தியா கூட்டணி பற்றி அமித்ஷா கிண்டல்

புதுடெல்லி, ஏப். 29– இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமராக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார். மோடி கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனம் செய்து வருகிறார். அதாவது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், அதன்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார். இவ்வாறு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை […]

Loading