மதுரை, நவ. 26– மதுரையில் இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்தது. மதுரை விமான நிலையம் அருகே விராதனூர், திருமங்கலம் பகுதிகளில் இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத […]