சென்னை, ஆக.20– தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பரில் நடைபெறவுள்ளதால் இணையதள முன்பதிவு செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சரின் அறிவிப்பின்படி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை“ விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான இணையதள முன்பதிவு 4.8.2024 முதல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்திட கடைசிநாள் 25–ந் […]