பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜன. 8– பொங்கலுக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலும், கேபிள் டிவிக்களிலும் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் […]