முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை சென்னை, செப்.20-– இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி, மேலாண்மைக் குழு தலைவர் ஷம்கல்லுஹா ரஹ்பானி, தணிக்கை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் நேற்று […]