செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

துபாய், அக்.19- பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் அரைசதம் அடித்தனர். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் ‘டாப்–8’ இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் விளையாடுகின்றன. இந்த அணிகள் போட்டிக்கு தயாராக பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. துபாயில் நேற்று இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆடவில்லை. […]

செய்திகள்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

துபாய், அக். 17– இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற […]

வர்த்தகம்

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரில் பிட்டர் உடற்பயிற்சி நிறுவனத்துக்கு புதிய மையம்

சென்னை, செப். 27 உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி நிறுவனமான பிட்டர், அதன் மூலதனத்தை 11.5 மில்லியன் டாலர் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் ட்ரீம் கேபிடல் மற்றும் எலிசியன் பார்க் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போதுள்ள முதலீட்டாளரான சீக்வோயா கேபிடல் இந்தியாவும் இந்த நிதி திரட்டல் சுற்றில் பங்கேற்றது. இதற்காக பிட்டரின் பிரத்யேக நிதி ஆலோசகராக அம்பித் செயல்பட்டார். பிட்டர் நிறுவனத்தால் திரட்டப்பட்ட இந்த புதிய மூலதனம் புதிய சந்தையில் அதன் வளர்ச்சி […]

செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தாயார் காலமானார்

லண்டன், செப். 14– இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் காலமானார். இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்சன். இவரது தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டர். லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் வௌியிட்ட அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் […]

செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் லண்டனில் இன்று தொடக்கம்

லண்டன், செப். 2– இந்தியா – -இங்கிலாந்து மோதும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்திலும், லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்திலும் […]

செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட இன்று தொடக்கம்

லண்டன், ஆக. 12– இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் டிரா […]

செய்திகள்

இந்தியாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திய இங்கிலாந்து

லண்டன், ஆக. 9– இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வருபவர்கள் 10 நாட்களுக்கு அரசு கூறும் விடுதியில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் அங்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் வீடுகளிலோ அல்லது தமக்கு வசதிப்படும் இடத்திலோ 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் […]