செய்திகள்

நாளை தொடங்கும் 2 நாள் ஜி–7 உச்சி மாநாடு: பிரதமர் பங்கேற்பு

டெல்லி, ஜூன் 11– இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை கலந்து கொள்கிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெறும், 47ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் ஜூன் 12, 13 ஆம் தேதிகளில் இந்திய பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். ஜி7 மாநாட்டுக்கு தற்போது தலைமையேற்றுள்ள இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக அழைத்துள்ளது. […]

செய்திகள்

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா- – ஆஸ்திரேலியா போட்டி தேர்வு

மும்பை, ஜூன் 9– உலகின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடராக 2020-–21-ம் ஆண்டில் நடந்த இந்தியா- – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 […]

நாடும் நடப்பும்

தடுப்பூசி வழங்குவதில் நல்ல முன்உதாரணம் அமெரிக்கா

நமது சொந்த பந்தங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய பிரதேசங்களில் இருப்பவர்களுடன் பேசும்போது எழும் ஓர் முக்கியமான அம்சம் எங்கள் ஊரில் முகக்கவசம் தேவையில்லை என்பதே! பெரும் பாதிப்பிற்குள்ளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தப் புது திருப்பம் வரக் காரணங்களில் ஒன்று கோவிட் தடுப்பூசியாகும். அமெரிக்காவில் ஜனத்தொகை 33 கோடி பேர். அவர்களில் இதுவரை 20 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 14 கோடி பேருக்கு 2 வது […]

செய்திகள்

கொரோனா வைரஸை 99.9 சதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு

சிட்னி, மே 19– உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸை 99.9 சதம் அழிக்கும் அரிய சிகிச்சை முறையை குயின்ஸ்லாந்திலுள்ள கிரிஃப்த் பல்கலைக்கழக சர்வதேச அறிவியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு […]

செய்திகள்

ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்: துணைத்தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதி

டோக்கியோ, மே 9– டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டடமிட்டபடி நடக்கும் என்று ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் ஜான் கோயட்ஸ் உறுதிபட கூறினார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. ஆனால் மறுபடியும் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியிருப்பதால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? […]

செய்திகள்

இந்தியாவில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சிட்னி, மே.8- கொரோனா காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் வைரஸ் பரவலில் இருந்து தங்கள் மக்களை பாதுகாக்கும் விதமாக இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. அதே சமயம் ஆஸ்திரேலியா, இந்திய விமான போக்குவரத்துக்கு தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், […]

செய்திகள்

இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு ஜெயில்:ஆஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு

சிட்னி, மே.1– இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது. தங்கள் நாட்டில் உருமாறிய வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை புரட்டிப் போட்டிருக்கிறது. தினமும் 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளும், 3,500-ஐ தாண்டி விட்ட உயிரிழப்புகளும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படி கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் […]

செய்திகள்

இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியாவும் தடை

சிட்னி, ஏப். 27– இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானங்கள் வர மே 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒருநாள் தொற்று 3 1/2 லட்சத்தை கடந்துள்ளது. அதனால் நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளன. மேலும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க அரசும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து கனடாவும் 30 […]