சிறுகதை

வேண்டுதல் – ஆவடி ரமேஷ்குமார்

மதுரை. திருச்சியிலிருக்கும் தன் அம்மாவிற்கு போன் செய்தாள் மதுமிதா. “ஹலோ” குரல் கேட்டதும் பதிலுக்குப் பேசினாள் மது. “என்னம்மா இது… உங்களுக்கே நல்லா இருக்குதா? பல வருஷங்கள் கழிச்சு நீங்க உண்டாகியிருக்கீங்க. இதைப் பெத்த பொண்ணு என்கிட்ட நேரடியா உங்க வாயால சொல்லாம, பக்கத்து வீட்டு கலாக்காகிட்ட சொல்லி அவங்க மூலமாக என்கிட்ட தகவல் சொல்லியிருக்கீங்களே… நியாமா? என்னை ரொம்ப இன்ஸல்ட் பண்ணிட்டீங்களே..!” அம்மாவிடம் பதிலுக்கு தயக்கம் தெரிந்தது. “ஏம்மா பேச மாட்டேங்கிறீங்க?” “அது வந்து மது… […]

சிறுகதை

திறமை – ஆவடி ரமேஷ்குமார்

என் நண்பன் குணா எனக்குப் போன் செய்த போது நான் என் அம்மா, அப்பாவுக்கு மாத்திரைகள் வாங்குவதற்காக மருந்து கடையில் நின்று கொண்டிருந்தேன். “ஹலோ குணா… என்ன விசயம்” என்று கேட்டேன். “சந்தோஷமான நியூஸ் தான். இந்த வார ‘சந்தனம்’ வார இதழ்ல என்னுடைய பத்தாவது நாவல் பிரசுரமாயிருக்குடா!” என்றான். எனக்கு அவன் மேல் பொறாமையாய் இருந்தது. சந்தோஷப்பட முடியவில்லை. இருந்தாலும் இருபது வருட நண்பன். “ரொம்ப சந்தோஷம். இப்பவே கடைக்குப் போய் உன் நாவலை வாங்கிப் […]

சிறுகதை

நடிகையின் மகள் – ஆவடி ரமேஷ்குமார்

ஹால் சோபாவில் அமர்ந்திருந்த தரகர் சாம்பசிவம் தான் கொண்டு வந்திருந்த பெண்களின் போட்டோக்களை எடுத்து டீபாயின் மேல் வைத்து விட்டு தன்னைச் சுற்றி நாற்காலிகளில் அமர்ந்திருந்த சோமசுந்தரத்தையும் அவரின் மனைவி ஜெயமணியையும் அவர்களின் மகன் சியாம் சுந்தரையும் பார்த்தார். “சரி, ஒவ்வொரு போட்டோவா காண்பிங்க சாம்பசிவம். செலக்ட் பண்ணுவோம்” என்றார் சோமசுந்தரம். ஏழெட்டு போட்டோக்களைப் பார்த்து அவைகளை நிராகரித்தனர் மூவரும். அடுத்து ஒரு போட்டோவைக் காண்பித்தார். அந்தப் பெண் மிக அழகாக, மங்களகரமாக, மனசுக்குப் பிடித்தபடி இருக்கவே… […]

சிறுகதை

என்ன இது புதுப்பழக்கம் – ஆவடி ரமேஷ்குமார்

அலுவலகம் முடிந்ததும் டூவீலரை எடுத்துக்கொண்டு நேராக ஒயின் ஷாப்பிற்கு போன நான், அங்கிருந்து வெளியே வந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நண்பன் சிவாவிற்கு போன் செய்தேன். அப்போது என் மனைவியின் உயிர் தோழி சௌம்யா என்னை பார்த்து விட்டு பார்க்காதது போல் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பிப் பார்த்து விட்டு சென்றாள். “ஹலோ சிவா” ” மாலை வணக்கம்…. கதாசிரியரே!” ” வணக்கம்.நீ எங்க இருக்க ஆபீஸ்லயா வீட்லயா?” ” என் ஆபீஸ்க்கும் வீட்டுக்கும் […]

சிறுகதை

பாசம் – ஆவடி ரமேஷ்குமார்

” அக்கா, உனக்கு விசயம் தெரியுமா?” என்று போனில் புதிருடன் ஆரம்பித்தாள் ரேவதி. ” என்ன விசயம்? ” என்று கேட்டாள் கல்யாணி. ” நம்மப்பா நமக்கு தெரியாம இருபது லட்ச ரூபாய் சீட்டு போட்டிருக்காரு. இப்ப அது டைம் முடிஞ்சு பணம் கைக்கு வந்திடுச்சாம்” ” உண்மையாவா சொல்ற? “ ” ஆமாக்கா” ” இதை உனக்கு யார் சொன்னா?” ” அப்பா வீட்டு வேலைக்காரி சரசு தான்!” ” சரசா சொன்னாள்? இதை எனக்குத் […]