ஜெய்ப்பூர், டிச. 24– ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. அவ்வாறு விழுந்த ஒருசில குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டாலும் பல நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதனை தடுக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை அப்படியே விடாமல் மூடுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. […]