வேதாசலம் ஒரு பிரபலமான கோவில் அர்ச்சகர். அவரது மனைவி சகுந்தலாவும் நல்ல குணவதி. வீட்டிலும் நல்ல வருமானம் வருவதால் செல்வச்செழிப்பு தான்.அவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன. கமலினி, மாலினி, நளினி என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனாலும் தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் வேதாசலம் . 4 வதாக தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கனவு கண்டு வந்த சகுந்தலாவும் கருத்தரித்திருந்தாள். கருத்தரித்திருந்தது முதல் சகுந்தலா மிகவும் பயப்பட்டாள். […]