சோமசுந்தரம் ஒரு அரசாங்க கடை நிலை ஊழியர். அவனுக்கும் சுலோச்சனா என்ற பொண்ணுக்கும் திருமணம் நடந்தேறியது. கிராமத்து பெண்தான். சற்று வசதியான குடும்பம்தான். திருமணமான உடனே மைலாப்பூரில் குடித்தனம் செய்ய வந்து விட்டார்கள். அவனுடைய சம்பளத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாடகை வீட்டில் குடி புகுந்தார்கள். அந்த வாழ்க்கைக்கு சுலோச்சனா முதலில் சிரமப்பட்டாள். அவனுக்கு சொந்தமாக வீடு வாங்கி கைகால்களை நீட்டி வீசி நடக்கும்படி வீடு கட்ட வேண்டும் என்பது அவளுடைய கனவு. சிவக்குமார், சிவப்பிரியா என்ற […]