வாழ்வியல்

சென்னை தையூரில் ஐஐடி-யின் உலகத் தர ஆராய்ச்சி வசதி

சென்னை தையூரில் ஐஐடி-யின் கண்டுபிடிப்பு வளாகத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்; சென்னை ஐஐடியில் இயங்கும் 2 ஆய்வு மையங்கள் 2021 இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும். சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மையங்களும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (ஸ்டார்ட்-அப்) இயங்கி வருகின்றன. இந்நிலையில், உலகத்தரத்திலான ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய கண்டுபிடிப்பு வளாகம் உருவாக்கும் முயற்சியில் ஐஐடி இறங்கியது. இதற்காக கடந்த 2017-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை கேளம்பாக்கம் […]

வாழ்வியல்

இனி மின்சாரத்துடன் செல்பி எடுத்துக்கொள்ளலாம்:

ஜெர்மனி கீல் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு மின்சாரம் எனப்படுவது அணுக்களில் உள்ள இலக்குத்திறன்கள் (எலக்டிரான்) அசைவின் மூலம் உருவாக்கப்படுகிறது. இது கண்ணுக்கு புலப்படாத ஒன்று. எனினும் மின்னல் தாக்கத்தின் போது நிலைமின் பாய்ச்சலை நாம் வெறுங்கண்ணால் பார்க்கலாம். எனினும் கண்ணுக்கு தெரியாத இலக்குத்திறன்களை எவ்வாறு புகைப்படம் எடுப்பது? உலகின் வேகமான புகைப்படக்கருவி கில் பல்கலைக் கழத்தில் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த புகைப்படக் கருவி மூலம் இலக்குத்திறன்கள் எவ்வாறு மின்சாரத்தை உருவாக்குகிறது என ஆய்வு செய்கின்றனர். இப்பரிசோதனையின் போது […]

வாழ்வியல்

பிறருக்கு உதவுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் : அமெரிக்காவின் புதிய ஆராய்ச்சி நிரூபித்துள்ளது

ஒரு குறிப்பிட்ட சம்பவம் அல்லது செயல்பாடு முடிந்தவுடன் நாம் உணருகின்ற மகிழ்ச்சியானது, படிப்படியாக குறைந்து விடுகிறது. இது ஹேடோனிக் விளைவு என அழைக்கப்படுகிறது. ஆனால் புதிய ஆராய்ச்சியின் படி கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி வாங்குவதில் உள்ள மகிழ்ச்சியை விட அதிகமாக நீடிக்கும் என அமெரிக்க உளவியல் அறிவியல் சங்கம் நிரூபித்துள்ளது. ஒரு பரிசோதனையில் பல்கலைக் கழக மாணவ பங்கேற்பாளர்கள் 5 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 டாலர்களை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றனர்; அவர்கள் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் […]

வாழ்வியல்

இந்திய இயற்பியலாளர் சத்யேந்திரநாத் போஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சி

புதிய சடப் பொருள் நிலைக் கொள்கைகளை போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம் என்று வான்வெளி அறிவியல் அறிஞர்கள் அழைக்கின்றனர். இதன் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். 1924 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியலாளர் சத்யேந்திரநாத் போஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு புதிய சடப்பொருள் நிலையொன்றை பற்றி கருத்துகளை தெரிவித்தார். பின்னர் இரு விஞ்ஞானிகளும் இணைந்து கணிதவியல் மூலம் சடப்பொருள் ஒன்று அடையக்கூடிய மிகவும் குளிரான மற்றும் ஒடுக்கமான நிலையொன்றை எடுத்துரைத்தனர். இதனை போஸ்-ஐன்ஸ்டீன் ஒடுக்கம் (Bose-Einstein Condensate) என அழைத்தனர். வெப்பநிலையை அளக்க […]